Friday, November 20, 2009

MUPPERUM VIZHA

"முப்பெரும் விழா அறிக்கை"
நமது கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தமிழ் மன்றம் ஆகிய அமைப்புகளின் தொடக்க விழாவான "முப்பெரும் விழா" 25/11/2009 அன்று புதன் கிழமை காலை பத்தரை மணியளவில் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வணக்கத்திற்குரிய கோவை மாநகர மேயர் திரு.ஆர்.வெங்கடாசலம் அவர்கள் மற்றும் மரியாதைக்குரிய கோவை மாநகர துணை மேயர் திரு.நா.கார்த்திக் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு.ஆர்.பிரபாகரன் அவர்கள் வரவேற்று பேசினார். அவரைத்தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் முனைவர் திரு.எஸ்.என்.சுப்பிரமணியன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றினர். பின்னர் கல்லூரியின் முதல்வர் முனைவர்.திரு.கு.கருப்புசாமி அவர்கள் முன்னிலையேற்று பேசினார். சிறப்புவிருந்தினர்களை தமிழ்மன்றத்தலைவர் திரு.கே.கார்த்திகேயன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

அடுத்துகோவை மாநகர மேயர் அவர்கள் லோட்டஸ் கண் மருத்துவமனையின் இலவசகண் மருத்துவமுகாமினை துவக்கிவைத்து உரையாற்றினார்.
அவர் தம் உரையில் மாணவர்கள் நாட்டு நலப்பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதனை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவரைத்தொடர்ந்து கோவை மாநகர துணைமேயர் அவர்கள் தமிழ்மன்றத்தினை தொடக்கிவைத்து உரையாற்றினார். அவர் தம் உரையில் தமிழ் வளர்ச்சியில் மாணவர் பங்கு என்ன என்பதனை பற்றியும், கோவையில் நடக்க இருக்கின்ற உலகத்தமிழ்மாநாட்டில் மாணவர்கள் எவ்வாறு பங்கு பெற வேண்டும் என்பதனை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் திரு.எம்.விஸ்வநாத் அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கூறினார். இறுதியாக நாட்டுப்பண் இசைக்க விழா இனிதாக நிறைவுற்றது.
INVITATION